தேசிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை + "||" + Sharad Pawar's "Advice" To Sachin Tendulkar For "Indians Know India" Post

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை
மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என சரத் பவார் கூறியுள்ளார்.
மும்பை,

விவசாயிகள் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். சச்சினின் இந்த டுவிட்களுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.  

இந்த நிலையில்,  மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சரத் பவார், "விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் அடுத்த மாதம் பாதயாத்திரை
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
3. 100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங்கிரஸ் போராடும் - பிரியங்கா காந்தி
100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
4. வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
5. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.