தேசிய செய்திகள்

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு: மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு + "||" + Broad consensus among states about conducting Class 12 board exams: Pokhriyal

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு: மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு: மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மத்திய கல்வி மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி, 

பிளஸ்-2 தேர்வுகள் குறித்தும், அதைத் தொடர்ந்து நடத்த வேண்டிய உயர்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் மாநிலங்களுடன் மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தியது.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால், மூத்த மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிரிதி இரானி, சஞ்சய் தோத்ரே, மாநில கல்வி மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் பேசிய மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால், “நாங்கள் நடத்திய கூட்டம் நன்கு பலன் அளித்தது. மதிப்புமிக்க யோசனைகள் பெறப்பட்டன.பிளஸ்-2 தேர்வுகள் தொடர்பாக மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் விரிவான ஆலோசனைகளை 25-ந் தேதிக்குள் (நாளைக்குள்) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து ஜூன் 1-ந் தேதியோ, அதற்கு பின்னரோ முடிவு எடுக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம்: மத்திய இணை மந்திரி தகவல்
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
2. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிளஸ்-2 தேர்வில் 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
3. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் பட்டியல் வெளியானது
சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
4. மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 41 கோடியை கடந்தது: மத்திய அரசு தகவல்
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வரும் மத்திய அரசு, அவற்றை இலவசமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
5. புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை
புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை.