புதுச்சேரியில் ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு


புதுச்சேரியில் ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 May 2021 4:21 PM GMT (Updated: 29 May 2021 4:21 PM GMT)

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். 

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க 214 சுகாதார பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த  ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 18+ வயதினருக்கு செலுத்தும் தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.1.05 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Next Story