தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 2.1 லட்சம் பேர் குணமடைந்தனர் + "||" + Declining corona exposure in India; Today 2.1 lakh people recovered

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 2.1 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 2.1 லட்சம் பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் புதிதாக 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,84,41,986 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,887 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,37,989 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,499 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,63,90,584 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 17,13,413 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 560 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் நேற்று 104 பேருக்கு கொரோனா; 161 பேர் டிஸ்சார்ஜ்
புதுச்சேரியில் தற்போது 1,248 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. இந்தியாவில் மது பழக்கத்தால் 62 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: லான்செட் பத்திரிகை
இந்தியாவில் மது குடித்ததால் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.
4. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
5. புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; நேற்று 103 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் தற்போது 1,327 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.