பெங்களூருவில் அடுத்த 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு - மாநகராட்சி கமிஷனர் தகவல்


பெங்களூருவில் அடுத்த 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு - மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 2:26 AM GMT (Updated: 13 Jun 2021 2:26 AM GMT)

பெங்களூருவில் அடுத்த 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அடுத்த 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 50 சதவீத இளைஞர்களுக்கு தடுப்பூசி போட்டு செலுத்தி முடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பெங்களூருவில் 70 சதவீத மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போட செயல் திட்டத்தை வகுத்துள்ளோம். கூலித்தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், குடிசை பகுதி வாழ் மக்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தனியார் நிறுவனங்கள், தனியார் மூலம் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்கிறார்கள்.

பெங்களூருவில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. ஆயினும் பொதுக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.”

இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.

Next Story