அந்தமான் நிகோபரில் 4 முறை தொடர் நிலநடுக்கங்கள்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 4 முறை தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
போர்ட்பிளேர்,
அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேர் நகரில் இன்று காலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது.
இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணியளவில் அடுத்தடுத்து முறையே ரிக்டரில் 4.6, 6.1 மற்றும் 5.9 அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story