காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Aug 2021 8:26 PM GMT (Updated: 10 Aug 2021 8:26 PM GMT)

ஜம்மு & காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பங்கை என்ற கிராமத்தில பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ரமீஸ் அகமத் தந்த்ரே என்று தெரியவந்தது. இவர் பிரபல லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான யூசுப் தந்த்ரேயின் மகன் ஆவார். ரமீஸ் கடந்த 2018ல், இந்திய பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்று திரும்பியவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சண்டையில் இறந்த மற்றொரு பயங்கரவாதி யார்? என்று இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.

Next Story