தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி: ராகுல் காந்தி விமர்சனம் + "||" + RSS, BJP trying to break J&K's composite culture: Rahul Gandhi

ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி: ராகுல் காந்தி விமர்சனம்

ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி: ராகுல் காந்தி விமர்சனம்
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.
ஜம்மு,

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் வருவது எனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல் உள்ளது. எனது குடும்பத்திற்கும், காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.உங்கள் மத்தியில், அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாசாரம் நிலவி வருகிறது. 

இந்த கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நினைக்கின்றன. உங்கள் அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது தாக்குதல் நடத்துகின்றன. நீங்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்து கொண்டது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை-தலைவர்கள் கண்டனம்
காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
2. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் ஜம்மு காஷ்மீர் பயணம்
உள்துறை மந்திரி அமித்ஷா 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
4. உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.
5. நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்: ராகுல் காந்தி
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் உ.பி.யில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்தனர்.