ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் - இந்தியாவுக்கு தலீபான்கள் கோரிக்கை


ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் - இந்தியாவுக்கு தலீபான்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2021 6:42 PM GMT (Updated: 30 Sep 2021 6:42 PM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகள் அந்த நாட்டுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா மீண்டும் தங்கள் நாட்டுக்கு விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தலீபான்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story