இயற்கை எரிவாயு விலை 62 சதவீதம் உயர்வு


இயற்கை எரிவாயு விலை 62 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 30 Sep 2021 7:20 PM GMT (Updated: 30 Sep 2021 7:20 PM GMT)

இயற்கை எரிவாயு விலை 62 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இயற்கை எரிவாயு விலை கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு முதல்முறையாக நேற்று அதன் விலையை மத்திய அரசு உயர்த்தியது. அதாவது 62 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இயற்கை எரிவாயு மூலம் தயாரிக்கப்படும் சி.என்.ஜி. எரிபொருள், வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை எரிவாயு விலை உயர்வால் சி.என்.ஜி.யின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயற்கை எரிவாயுவால் தயாரிக்கப்படும் உரம், மின்சாரம், குழாய்வழி சமையல் வாயு ஆகியவற்றின் விலை உயர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Next Story