நாட்டின் இறையான்மை எத்தகைய விலை கொடுத்தேனும் உறுதி செய்யப்படும் - விமானப்படை புதிய தளபதி


நாட்டின் இறையான்மை எத்தகைய விலை கொடுத்தேனும் உறுதி செய்யப்படும் - விமானப்படை புதிய தளபதி
x
தினத்தந்தி 30 Sep 2021 10:43 PM GMT (Updated: 30 Sep 2021 10:43 PM GMT)

நாட்டின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாப்பு எத்தகைய விலை கொடுத்தேனும் உறுதி செய்யப்படும் என்று விமானப்படை புதிய தளபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையின் தளபதியாக செயல்பட்டுவந்த ஆர்.கே.எஸ். பதாரியாவின் பதவி காலம் கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

விமானப்படையின் துணை தளபதியாக செயல்பட்டு வரும் விவேக் ராம் சவுதாரி விமானப்படையின் 27-வது தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், விமானப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள விவேக் ராம் சவுதரி பேசுகையில், நாட்டின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாப்பு எத்தகைய விலை கொடுத்தேனும் உறுதி செய்யப்படும்’ என்றார்.

Next Story