அந்தமான் நிகோபாரில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு


அந்தமான்  நிகோபாரில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 7:24 AM GMT (Updated: 1 Oct 2021 7:24 AM GMT)

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ட் பிளேர், 

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  7,621- பேருக்கு ஆக உயர்ந்துள்ளது. விமான நிலையத்தில்  பயணிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

அந்தமானில் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9- ஆக உள்ளது. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதி தொற்று பாதிப்பு இல்லாத இடமகாக உள்ளது.

 அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு புதிய உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்தமான் நிகோபார் தீவுகளில் இதுவரை 4.42 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

Next Story