செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.17 லட்சம் கோடி


செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.17 லட்சம் கோடி
x

செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1.17 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.1.17 லட்சம் கோடி சரக்கு சேவை வரியாக வசூலாகி உள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக இந்த வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. ஜூலை மாதம் ரூ.1.16 லட்சம் கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.1.12 லட்சம் கோடியும் ஜி.எஸ்.டி.யாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 10 கோடியில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.20 ஆயிரத்து 578 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.26 ஆயிரத்து 767 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.60 ஆயிரத்து 911 கோடி ஆகும். தொடர்ந்து ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருவதால் இந்த நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வரி வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.


Next Story