உ.பி.: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி


உ.பி.: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2021 8:52 PM GMT (Updated: 1 Oct 2021 8:52 PM GMT)

உத்தரபிரதேசத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷம்லி மாவட்டம் கைரானா என்ற பகுதியில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்துள்ளது. அந்த பட்டாசு ஆலையில் 10 பேர் வேலை செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் நேற்று வழக்கமாக பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் ஆலையில் வேலை செய்துவந்த 10 பேரும் சிக்கிக்கொண்டனர். வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீப்பற்றியது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். எஞ்சிய 2 பேர் எந்த பாதிப்பும் உயிர்தப்பினர்.

இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பறினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தியது தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story