பாஜகவுடன் சேர்ந்து கூட்டுச்சதி..? - கேப்டன் அமரிந்தர் சிங் விளக்கம்


பாஜகவுடன் சேர்ந்து கூட்டுச்சதி..? - கேப்டன் அமரிந்தர் சிங் விளக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2021 4:34 PM GMT (Updated: 3 Oct 2021 4:34 PM GMT)

பாஜகவுடன் சேர்ந்து சதி செய்ததாக வெளிவந்த தகவல்கள் குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில கல்வி  மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், அம்மாநிலத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கான தாமதத்துக்கு கேப்டன் அமரிந்தர் சிங்-பாஜகவின் கூட்டு சதி தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை மறுத்துள்ள அமரிந்தர் சிங், பஞ்சாப் மக்களுக்கு தன்னை பற்றி நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார். ‘அமைச்சர் கூறிவரும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா?’  என கேள்வியும் எழுப்பியுள்ளார். தான் எப்போதும் விவசாயிகளின் நண்பன் என்றும் கூறியுள்ளார். பாஜகவுடன் சேர்ந்து சதி செய்ததாக வெளிவந்த தகவல்கள் பொய்யானவை என்றும் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி,  அக்டோபர் 3ம் தேதியிலிருந்து நெல் கொள்முதல் பணிகளை தொடங்கலாம் என அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமரை சந்தித்து நெல் கொள்முதல் பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடந்த கலவரங்களால் அக்டோபர் 3ம் தேதியிலிருந்து நெல் கொள்முதல் பணிகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

Next Story