கடந்த 5 ஆண்டுகளில் 813 புதிய ரெயில்கள் அறிமுகம்


கடந்த 5 ஆண்டுகளில் 813 புதிய ரெயில்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 3 Oct 2021 11:59 PM GMT (Updated: 3 Oct 2021 11:59 PM GMT)

கடந்த 5 ஆண்டுகளில் 813 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து ரெயில்வே பட்ஜெட்டை தனியாக சமர்ப்பிக்காமல், மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்ய தொடங்கினர்.

அந்த ஆண்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 813 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரெயில்வே வாரியம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா காரணமாக, 2020-2021 நிதியாண்டில் ஒரு புதிய ரெயில் கூட அறிமுகப்படுத்தப்படவில்லை. முன்பெல்லாம், பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு, பெரும் எதிர்பார்ப்புடன் கவனிக்கப்படும். ஆனால், இப்போது தேவை ஏற்படும்போது மட்டுமே புதிய ரெயில்கள் அறிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story