விவசாயிகள் போராட்டம்: அரியானா முதல்-மந்திரியின் சர்ச்சை கருத்தால் சலசலப்பு


விவசாயிகள் போராட்டம்: அரியானா முதல்-மந்திரியின் சர்ச்சை கருத்தால் சலசலப்பு
x
தினத்தந்தி 4 Oct 2021 2:01 AM GMT (Updated: 4 Oct 2021 2:01 AM GMT)

விவசாயிகள் போராட்டம் குறித்து அரியானா முதல்-மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியானா மாநில பாஜக விவசாய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசுகையில், அரியானாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நீங்கள் 700-1000 விவசாயிகளை கொண்ட தன்னார்வலர்கள் குழுக்களை வெவ்வேறு பகுதிகளில் அமைக்க வேண்டும். அவர்களை போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையில் பயன்படுத்த வேண்டும். கட்டைகளை (ஸ்டிக்ஸ்) கையில் எடுங்கள்’ என்றார்.  

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story