ரூ.300 கடனை திருப்பி கொடுக்க முடியாத நபர் அடித்து கொலை


ரூ.300 கடனை திருப்பி கொடுக்க முடியாத நபர் அடித்து கொலை
x
தினத்தந்தி 4 Oct 2021 8:04 PM GMT (Updated: 4 Oct 2021 8:04 PM GMT)

டெல்லியில் ரூ.300 கடனை திருப்பி கொடுக்க முடியாத நபரை அடித்து கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆனந்த் பர்பாத் பகுதியில் வசித்து வந்தவர் சைலேந்திரா.  மருந்து கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.  இவர் ரவி என்பவரிடம் ரூ.300 கடன் வாங்கியுள்ளார்.  கொடுத்த கடனை திருப்பி தரும்படி ரவி கேட்டுள்ளார்.

ஆனால், அந்த தொகையை கூட திருப்பி கொடுக்க முடியாத சூழலில் அவர் இருந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த ரவி சிலருடன் சேர்ந்து சைலேந்திராவை அடித்து கொன்றுள்ளார்.  இந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story