தேசிய செய்திகள்

லகிம்பூர் விவகாரம்: நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் ராகுல் காந்தி! + "||" + Congress delegation to meet President Ram Nath Kovind, present memorandum on Lakhimpur incident

லகிம்பூர் விவகாரம்: நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

லகிம்பூர் விவகாரம்: நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் ராகுல் காந்தி!
லகிம்பூர் விவகாரம் தொடர்பாக, நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்திக்க உள்ளனர்.
புதுடெல்லி, 

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார். லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் லகிம்பூர் விவகாரம் தொடர்பாக நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் சந்திக்க உள்ளனர்.  லகிம்பூர் சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி குடியரசு தலைவரை நாளை காலை 11 மணிக்கு சந்தித்து மனு அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் நாளை 5-ஆவது மெகா தடுப்பூசி முகாம்!
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
2. "தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. ‘குலாப்’ புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்
குலாப் புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னையில் நாளை 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னையில் நாளை 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
5. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: தங்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!
டோக்கியோ பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் கிருஷ்ணா நாகருக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.