தேசிய செய்திகள்

அசாமில் நேற்று 175 பேருக்கு கொரோனா; 381 பேர் டிஸ்சார்ஜ் + "||" + Corona for 175 people yesterday in Assam 381 discharged

அசாமில் நேற்று 175 பேருக்கு கொரோனா; 381 பேர் டிஸ்சார்ஜ்

அசாமில் நேற்று 175 பேருக்கு கொரோனா; 381 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,456 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,05,640 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,936 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 381 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,95,901 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 2,456 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. “10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா” - ஆண்டனியோ குட்டரெஸ் தகவல்
கொரோனா பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளி விட்டது என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.90 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.62 கோடியாக உயர்ந்துள்ளது.
3. கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,11,083 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் இன்று 406 பேருக்கு கொரோனா; 637 பேர் டிஸ்சார்ஜ்
கர்நாடகாவில் தற்போது 10,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 16,130 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.