தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + Corona infection affects 310 people in Karnataka today

கர்நாடகத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

கர்நாடகத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கர்நாடகாவில் தற்போது 9,578 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,82,399 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,922 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,34,870 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 9,578 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.72 கோடியாக உயர்ந்துள்ளது.
2. மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா
தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.
3. அசாமில் நேற்று 175 பேருக்கு கொரோனா; 381 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,456 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. “10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா” - ஆண்டனியோ குட்டரெஸ் தகவல்
கொரோனா பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளி விட்டது என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
5. கர்நாடகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு - மந்திரி அஸ்வத்நாராயண் தகவல்
கர்நாடகத்தில் அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளிலும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை தொடங்குவது கட்டாயம் என உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.