தேசிய செய்திகள்

அசாமில் நேற்று 207 பேருக்கு கொரோனா; 362 பேர் டிஸ்சார்ஜ் + "||" + Corona for 207 people in Assam yesterday 362 discharged

அசாமில் நேற்று 207 பேருக்கு கொரோனா; 362 பேர் டிஸ்சார்ஜ்

அசாமில் நேற்று 207 பேருக்கு கொரோனா; 362 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,299 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,05,847 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,938 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 362 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,96,263 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 2,299 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 453 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.47 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22.19 கோடியாக உயர்ந்துள்ளது.
3. பீஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைப்பு
பீஜிங் மாரத்தான் வருகிற 31-ந்தேதி நடைபெற இருந்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22.14 கோடியாக உயர்ந்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
தமிழகத்தில் தற்போது 13,034 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.