நாடு முழுவதும் ஒரு நாளில் 8.36 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Oct 2021 8:02 PM GMT (Updated: 16 Oct 2021 8:02 PM GMT)

கொரோனாவுக்கு எதிராக ஒரு நாளில் 8.36 லட்சம் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் இல்லை என தெரிய வந்துள்ளது.

நேற்று காலை 7 மணி வரையிலான ஒரு நாளில் நாடு முழுவதும் 8 லட்சத்து 36 ஆயிரத்து 118 ‘டோஸ்’ தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது. முதல் டோசாக 3 லட்சத்து 39 ஆயிரத்து 919 பேரும், இரண்டாவது டோசாக 4 லட்சத்து 96 ஆயிரத்து 199 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் மொத்தம் 97 கோடியே 23 லட்சத்து 77 ஆயிரத்து 45 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 69 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 131 பேருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 27 கோடியே 93 லட்சத்து 62 ஆயிரத்து 914 பேர் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story