தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு; மிக மோசமான நிலையில் காற்றின் தரம் + "||" + Air pollution in Delhi Air quality in very poor condition

டெல்லியில் காற்று மாசு; மிக மோசமான நிலையில் காற்றின் தரம்

டெல்லியில் காற்று மாசு; மிக மோசமான நிலையில் காற்றின் தரம்
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் டெல்லியில் கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 339 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 9,197 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 9,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று 11,486 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 58,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. டெல்லியில் இன்று 10,756 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 61,954 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. டெல்லியில் இன்று 12,306 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 68,730 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. குளிருக்காக பற்றவைத்த அடுப்பு... புகையால் மூச்சுத்திணறி 4 குழந்தைகள்- தாய் பலி
குளிருக்காக பற்றவைத்த அடுப்பிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி 4 குழந்தைகள் மற்றும் தாய் பலியாகி உள்ளனர்.