தேசிய செய்திகள்

‘ஒமிக்ரான்’ வைரஸ்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...! + "||" + WHO tells Southeast Asian countries over new strain 'Omicron'

‘ஒமிக்ரான்’ வைரஸ்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...!

‘ஒமிக்ரான்’ வைரஸ்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...!
புதிய வைரசால் விழிப்புடன் இருக்குமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி, 

தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம்) உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, “பண்டிகைகள், பிற கொண்டாட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அவசியம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வகையிலும் பாதுகாப்பு அம்சங்களை விட்டு விடக்கூடாது. நமது பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய வகை வைரஸ் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் தொடர்ந்து வரும் ஆபத்து, வைரசிடம் இருந்து நம்மை பாதுகாக்கவும், அதன் பரவலைத்தடுக்கவும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது அவசியம் என்பதை நினைவுபடுத்துகிறது. நாடுகள் கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒமிக்ரான்’ வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல்
‘ஒமிக்ரான்’ வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. அச்சுறுத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்: பல நாடுகளில் பரவ தொடங்கியது..!!
சர்வதேச அளவில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. ஒமிக்ரான் உலகின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது - பீதியை கிளப்பும் தென் ஆப்பிரிக்கா
ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே உலகின் பல பகுதிகளுக்கு பரவிவிட்டதாக தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
4. உலகை அச்சுருத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்: கனடாவிலும் பரவியது..!
கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதியவகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. ‘ஒமிக்ரான்’ வைரசுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகள் சாத்தியமா..?
ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகளில் பயண தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.