தேசிய செய்திகள்

ரஷிய அதிபர் இந்தியா வருகை - முக்கியமான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! + "||" + Russia, India to sign 10 bilateral agreements including semi-confidential ones, says Russian Presidential aide

ரஷிய அதிபர் இந்தியா வருகை - முக்கியமான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

ரஷிய அதிபர் இந்தியா வருகை - முக்கியமான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!
இந்தியா - ரஷியா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியா - ரஷியா நாடுகளிடையேயான 21-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார். 

2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் மேற்கொள்ள உள்ள முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  

இருநாட்டு தலைவர்களும் சர்வதேச பிரச்சினைகள் மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 

இந்தியா - ரஷியா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரிகளிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன.

அதன்படி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கேய் லாவ்ரோவ் மற்றும்  பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷோய்கு ஆகியோர் இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்து பேச உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா? - நிபுணர் பதில்
இந்தியாவில் தொடர்ந்து தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
2. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு...!
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது.
3. இந்தியாவில் தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு - இன்று 2.71 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
5. கேப்டவுன் டெஸ்ட்: ரிஷப் பண்ட் அதிரடி சதம் - தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு
2 வது இன்னிங்சில் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.