காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது - காங். மூத்த தலைவர் பரபரப்பு கருத்து


காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது - காங். மூத்த தலைவர் பரபரப்பு கருத்து
x
தினத்தந்தி 27 Jan 2022 3:40 PM GMT (Updated: 2022-01-27T21:10:31+05:30)

காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக்கொணிடிருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் சிஎம் இப்ராகிமும் ஒருவர். இதற்கிடையில், கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பிகே ஹரிபிரசாத்தை காங்கிரஸ் அறிவித்தது. 

இதனால், இப்ராகிம் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளார். அவர் காங்கிரசில் இருந்து விலகி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது என்று இப்ராகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது. காங்கிரசில் பணம் இல்லாமல் யாரும் வேலை செய்ய முடியாது. இந்திரா காந்தி, நேரு காலத்தில் காங்கிரஸ் சமூகத்திற்கான கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது அது லீனா வங்கியாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும். காங்கிரஸ் மூழ்கிவிட்டது’ என்றார்.

Next Story