காஷ்மீா் பண்டிட்களின் பாதுகாப்பை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்; அரவிந்த கெஜ்ரிவால் வலியுறுத்தல்


காஷ்மீா் பண்டிட்களின் பாதுகாப்பை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்; அரவிந்த கெஜ்ரிவால் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 May 2022 5:35 PM IST (Updated: 16 May 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட், அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட்,   அலுவலகத்தில்  வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். ராகுல் பட் கொலையை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காஷ்மீர் பண்டிட் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் போனது,  நிர்வாகத்தின் தோல்வி  என கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை அடக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

இதுகுறித்து கருத்து தொிவித்த டெல்லி மாநில முதல்- அமைச்சா் கெஜ்ரிவால்   காஷ்மீா் பண்டிட் சமுகத்தை சாா்ந்த ராகுல்பட் கொல்லப்பட்டது, திட்டமிடபட்ட படு கொலை என தொிவித்தாா். அதே நாளில் இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.  

ஆனாலும்,  இந்த சம்பவம் காஷ்மீர் பண்டிட்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ராகுல் பட் கொலைக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது . இந்த தடியடிக்கு காரணமான அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்,'' என்றார்.

காஷ்மீாில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என உணா்ந்தால், மற்ற மாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகள் எப்படி காஷ்மீருக்குத் திரும்புவது பற்றி  நினைப்பார்கள். இது அரசியல் செய்யும் நேரம் அல்ல, நாட்டுக்கான நேரம்.  எனவே காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவா் கூறினாா்.


Next Story