மராட்டிய மாநிலத்தில் புதிதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதிதாக 10 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 10 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story