பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது


பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
x

உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது,

சுஜித் கெளதம் என்ற நபர் ஒருவர், பள்ளி மாணவியின் முன்பாக வந்து நின்று ஆபாசமாக சைகை செய்துள்ளார். தொடர்ந்து, அந்த இடத்தை விட்டு தப்பிக்க முயன்ற சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக சிறுமி கத்தியபோது, அவளை கழுத்தை நெரித்துள்ளார். சிறுமி அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, கௌதம் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் கௌதமை கைதுசெய்த போலீசார், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story