இந்தியாவில் மேலும் 475 பேருக்கு தொற்று: 6 பேர் பலி
புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேருக்கு கொரோனா வைரசின் திரிபான ஜேஎன்.1 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 3 பேரும், சத்தீஷ்காரில் 2 பேரும் அசாமில் ஒருவரும் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
டிசம்பர் 5-ம் தேதி வரை இரட்டை இலக்குடன் பதிவான தினசரி பாதிப்புகள் சற்று குறைய தொடங்கி உள்ளது. குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜேஎன்.1 வைரஸ் பரவல் சற்று அதிகமாகி உள்ளது.
ஜேஎன்.1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று குணமாகி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.