ஜம்மு காஷ்மீரில் நடப்பாண்டில் இதுவரை 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: காவல் துறை தகவல்


ஜம்மு காஷ்மீரில் நடப்பாண்டில் இதுவரை 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: காவல் துறை தகவல்
x

image credit: ndtv.com

ஜம்மு காஷ்மீரில் நடப்பாண்டில் இதுவரை 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், 32 பயங்கரவாதிகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 2 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 55 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடப்பாண்டில் கொல்லப்பட்ட 118 பேரில் 77 பயங்கரவாதிகள் பாக். ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், 26 பயங்கரவாதிகள். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் அவ்வபோது பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசாரால் முறியடிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.


Next Story