பாரத் கவுரவ் காசி புனித யாத்திரை ரெயிலில்


பாரத் கவுரவ் காசி புனித யாத்திரை ரெயிலில்
x

பாரத் கவுரவ் காசி புனித யாத்திரை ரெயிலில் 546 பேர் பயணம் மேற்கொண்டனர்.

பெங்களூரு:-

பஜனை-கீர்த்தனை

பிரதமர் மோடி பெங்களூருவில் நேற்று பாரத் கவுரவ் காசி புனித யாத்திரை ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதில் 11 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டிகள் அனைத்தும் 3 நிலை ஏ.சி. வசதியை கொண்டது. அது தவிர பக்தர்களின் வசதிக்காக ஒரு பெட்டி பஜனை, கீர்த்தனை பாடல்களை பாட ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பெட்டி சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது.

ரெயில்வே துறைக்கு கர்நாடக அரசு ரூ.1 கோடி டெபாசிட் செலுத்தி ஒப்பந்த அடிப்படையில் அந்த ரெயிலை பயன்படுத்த பெற்றுள்ளது. ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரை காசிக்கு அழைத்து செல்ல மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 8 நாட்கள் புனித யாத்திரைக்கு ஒருவருக்கு கட்டணம் ரூ.20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் மாநில அரசு மானியமாக ரூ.5 ஆயிரத்தை வழங்குகிறது.

546 பேர் பயணம்

நேற்று பகல் 1.30 மணியளவில் அந்த காசி ரெயில் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து யாத்திரையை தொடங்கியது. அதில் 546 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த ரெயிலில் காசி செல்ல இந்து சமய அறநிலையத்துறை இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு முறை மட்டுமே அதன் பயனை பெற முடியும்.


Next Story