புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் யார்? ரங்கசாமியுடன் பா.ஜ.க. ஆலோசனை
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார், அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்.பி., செல்வகணபதி ஆகியோர் இன்று அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது புதுச்சேரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
Related Tags :
Next Story