கார் மரத்தின் மீது மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு


கார் மரத்தின் மீது மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Feb 2024 3:27 PM GMT (Updated: 23 Feb 2024 8:26 AM GMT)

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.


Next Story