தேர்தல் நடத்தை விதிமீறல்; மந்திரி சசிகலா ஜோலே மீது வழக்கு


தேர்தல் நடத்தை விதிமீறல்; மந்திரி சசிகலா ஜோலே மீது வழக்கு
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:45 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக மந்திரி சசிகலா ஜோலே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெலகாவி:

கர்நாடக மந்திரி சபையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் ரன்ராகினி மகிளா மண்டலத்தால் அரிசின குங்கும நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் சசிகலா ஜோலே கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பேனரில் பா.ஜனதா கட்சி சின்னமான தாமரையும், சசிகலா ஜோலோ புகைப்படமும் இருந்தது. தேர்தல் நடத்தை விதிைய மீறி கட்சி சின்னம், புகைப்படம் இருந்தததால் சிக்கோடி போலீசார், மந்திரி, நிகழ்ச்சி ஏற்பட்டாளர் மீது தேர்தல் நடத்தை விதிமீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story