நிலக்கரி முறைகேடு வழக்கு: மே.வங்காள சட்ட மந்திரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை


நிலக்கரி முறைகேடு வழக்கு: மே.வங்காள சட்ட மந்திரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை
x

நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் மாவட்டம் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடம் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சமீப காலமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ விசாரணை நடப்பதாகவும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தங்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்து வரும் நிலையில், இன்று அக்கட்சியை சேர்ந்த ஒரு மந்திரி வீட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story