முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாம்ராஜ்நகர் வருகை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாம்ராஜ்நகருக்கு வர இருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.
கொள்ளேகால்:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு விரைவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வர இருக்கிறார். அவர் வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அவர் சாம்ராஜ்நகருக்கு வருவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் வந்து செல்வது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் தனது அலுவலகத்தில் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர் வருகிற தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அவர் வர இருக்கிறார். அவர் சாம்ராஜ்நகர் மற்றும் ஹனூரில் வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்க வைக்க உள்ளார்.
சாமி தரிசனம்
மேலும் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்ய உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் கவனமாக முன்னின்று செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும். நிகழ்ச்சி நிரல் உள்பட அனைத்து பணிகளையும் முன்னரே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரையில் அதிகாரிகள் அனைவரும் விடுப்பு எடுக்காலம் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.