கேரளாவில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 14 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். திரிசூர் தொகுதியில் வி.முரளீதரன் போட்டியிட உள்ளார். அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story