சத்தீஸ்கர் மாநில துணை முதல் மந்திரியாக டி.எஸ்.சிங் தியோ நியமனம்


சத்தீஸ்கர் மாநில துணை முதல் மந்திரியாக டி.எஸ்.சிங் தியோ நியமனம்
x

சத்தீஸ்கர் மாநில துணை முதல் மந்திரியாக டி.எஸ்.சிங் தியோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

சத்தீஸ்கர் முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருபவர் டி.எஸ். சிங் தியோ. முதல் மந்திரி பூபேஷ் பாகெலும், டி.எஸ். சிங் தியோவும் இன்று தலைநகர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் துணை முதல் மந்திரியாக டி.எஸ். சிங் தியோ நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக டி.எஸ். சிங் தியோவை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்து டிஎஸ் சிங் தியோவுக்கும், முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாகவே இந்த வித்தியாசத்தை தீர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story