வாக்களித்த மக்களுக்கு நன்றி: சித்தாந்த போர் தொடரும்: ராகுல் காந்தி


வாக்களித்த மக்களுக்கு நன்றி: சித்தாந்த போர் தொடரும்: ராகுல் காந்தி
x

தெலுங்கனாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4.45 மணி நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் 230 இடங்களில் 167 இடங்களிலும், ராஜஸ்தானில் 199 இடங்களில் 116 இடங்களிலும், சத்தீஷ்காரில் 90 இடங்களில் 55 இடங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. 3 மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

இதனிடையே, தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- தெலுங்கானாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். சித்தாந்தத்திற்கு இடையேயான போர் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story