பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள்; நீதி கேட்டு சென்ற தாய்க்கு நேர்ந்த கதி
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்கு நீதி கேட்டு சென்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த அவலம் நேர்ந்துள்ளது.
கன்னோஜ்,
உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகளுக்கு நீதி கேட்டு அவரது தாயார் ஹாஜி ஷெரீப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார்.
அந்த பெண்ணை வழக்கு விவரம் பற்றி பேச வேண்டும் என கூறி, காவல் நிலையத்தின் உயரதிகாரியான அனூப் மவுரியா, தனது இல்லத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.
இதனை நம்பி, பாதிக்கப்பட்ட மகளின் தாயார் உயரதிகாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், வேலியே பயிரை மேய்ந்தது போல், நீதி கேட்டு சென்ற இடத்தில் அனூப் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில் உயரதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண் அளித்த புகாரின்பேரில் அனூப் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட அனூப் மவுரியாவை போலீசார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.