டெல்லியில் தீவிரமாகும் கொரோனா... ஒரே நாளில் புதிதாக 1,118 பேருக்கு பாதிப்பு உறுதி !


டெல்லியில் தீவிரமாகும் கொரோனா... ஒரே நாளில் புதிதாக 1,118 பேருக்கு பாதிப்பு உறுதி !
x

டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று 82 சதவீதம் அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் ஒரு சில நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,118 ஆக அதிகரித்து உள்ளது. அதாவது நேற்றைய பாதிப்பை விட இன்று 82 சதவீதம் அதிகரித்து உள்ளது.

நேற்று 614 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று ஆயிரத்தை கடந்து தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு அங்கு 3 ஆயிரத்து 177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story