பஞ்சாப்பில் ரூ.240 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
ஜலந்தர்,
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.240 கோடி மதிப்புள்ள 48 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று உயர் ரக வாகனங்கள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் போன்றவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story