கல்வி என்பது சமூக மக்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ஒரு வழி: யோகி ஆதித்யநாத் பேச்சு


கல்வி என்பது சமூக மக்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ஒரு வழி:  யோகி ஆதித்யநாத் பேச்சு
x

பாதுகாப்பில் விளையாடுபவர்களுக்கு எதிராக, எந்தவித வேற்றுமையும் இன்றி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் அரசு இல்லத்திற்கு கேரளாவின் பாலக்காடு ஐ.ஐ.டி. மற்றும் லட்சத்தீவு ஐ.ஐ.டி. மாணவர்கள் 45 பேர் இன்று வருகை தந்தனர்.

அவர்களில் 10 பேர் லட்சத்தீவையும், 35 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் 25 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் முதல்-மந்திரி ஆதித்யநாத்துடன் உரையாடினர்.

அப்போது மாணவ மாணவியருடன் தொடர்புடைய அனைத்து விசயங்களையும் பற்றி பேசினார். அவர்களிடம் பேசிய ஆதித்யநாத், பிரதமர் மோடியின் உந்துதலால், கல்வி அமைச்சகம் இந்த புதிய பரிசோதனையை தொடங்கி உள்ளது.

நீங்கள் வந்த கேரளாவில் இருந்தே சங்கராச்சாரியாரும் பல ஆண்டுகளுக்கு முன் உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார் என கூறியுள்ளார்.

இதன்பின் அவர், கல்வி என்பது சமூக மக்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ஒரு வழியாகும். உங்களில் பலர் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக வந்துள்ளீர்கள்.

ஒருவர், எந்த பகுதியை சேர்ந்தவராக இருப்பினும், எப்போதும் நாட்டின் மீது அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும். நாடு, பிரச்சனையில் இருக்கும்போது, அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என கூறியுள்ளார்.

கேரளாவை போல் உத்தர பிரதேசமும் நாட்டின் ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியங்களை பிரதிபலிக்கிறது. உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

எனினும், எந்த ஊரடங்கும், எந்தவித கலகமும் இல்லை. பாதுகாப்பு விசயத்தில் ஒவ்வொரு சாதி மற்றும் மதத்தினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். பாதுகாப்பில் விளையாடுபவர்களுக்கு எதிராக, எந்தவித வேற்றுமையும் இன்றி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story