பெங்களூரு-ஜப்பான் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை


பெங்களூரு-ஜப்பான் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை
x

பெங்களூருவில் இருந்து ஜப்பானுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் இனி விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

பெங்களூரு:


பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கெம்பேகவுடா விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்கு வாரத்தில் 2 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கூடுதல் விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பான் விமான நிறுவனம் (ஜே.ஏ.எல்.) வாரத்தில் 3 நாட்கள் விமான சேவை வழங்க உள்ளது. பெங்களூருவில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் இந்த விமானம் 8.40 மணி நேரத்தில் டோக்கியோவை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story