தங்கும் விடுதியில் சூதாட்டம்; 7 பேர் கைது
தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7பேரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு-
மைசூரு நகர் விஜயநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தங்கும் விடுதி ஒன்றின் அறையில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தங்கும் விடுதியின் ஒரு அறையில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட வைத்திருந்த ரூ.1.26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைதான 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களின் பெயர், விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
Related Tags :
Next Story