ஒரே பாரதம் சிறந்த பாரதத்திற்கு கோவா சிறந்த எடுத்துக்காட்டு; பிரதமர் மோடி பேச்சு
கோவாவில் பல்வேறு சமூகங்கள் மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.
தெற்கு கோவா,
பிரதமர் மோடி, கோவாவில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து இன்று பேசினார். அவர், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்ட நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, பா.ஜ.க.வின் மந்திரம் அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே ஆகும். கோவா, பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில் வேண்டுமென்றால் சிறிய அளவில் இருக்கலாம்.
ஆனால், சமூக பன்முக தன்மையில் அது பெரியது. வளம் நிறைந்தது. கிறிஸ்தவ சமூகம் மற்றும் பிற நம்பிக்கை சார்ந்த மக்கள் கோவாவில் நல்லிணக்கத்துடன் வாழும் முறையே ஒரே பாரதம், சிறந்த பாரதம் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
கோவாவில் பல்வேறு சமூகங்கள் மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். பல தலைமுறைகளாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
அதனால், கோவாவின் இந்த மக்கள் பா.ஜ.க.வை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும்போது, நாடு முழுவதும் அதன் செய்தி சென்று சேர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.