கெஜ்ரிவாலை முதல் மந்திரி பதவியிலிருந்து நீக்கக்கோரிய மனுவை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு


கெஜ்ரிவாலை முதல் மந்திரி பதவியிலிருந்து நீக்கக்கோரிய மனுவை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 4 April 2024 8:01 AM GMT (Updated: 4 April 2024 11:01 AM GMT)

முதல் மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி அவர் தனது முதல்-மந்திரி பணிகளை கவனிக்கிறார்.

இந்த நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விஷ்ணு குப்தா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரனைக்கு வந்தது.

அப்போது கூறிய நீதிபதிகள், "சில நேரங்களில், தனிப்பட்ட நலன்கள் மற்றும் தேச நலனுக்கு அடிபணிய வேண்டும். நீதிமன்றம் சட்டத்தின்படிதான் செல்லவேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரர் விஷ்ணு குப்தாவின் வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெறவிருப்பதாகவும், தனது மனுவுடன் துணைநிலை கவர்னரை அணுக உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, மனுவை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்து மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.


Next Story