தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்த பெண்கள் வளர்ச்சி திட்ட அதிகாரி பணியிடை நீக்கம்


தேர்தல் பணியில் அலட்சியமாக  இருந்த  பெண்கள் வளர்ச்சி திட்ட அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்த பெண்கள் வளர்ச்சி திட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி திட்ட அதிகாரியாக சிவபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் மாநில சட்டசபை தேர்தலுக்காக தரிகெரே மற்றும் கடூர் தொகுதியில் வேட்பாளர்களின் கணக்கு விவரங்கள், அனுமதி வழங்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணிகள் செய்து வந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த சில தினங்களாக பணியில் அலட்சியாக இருந்ததுள்ளார். இதையடுத்து சிவபிரகாசை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபடுவர்கள் அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். மேலும் இதுபோன்று தேர்தல் அதிகாரிகள் பணியில் அலட்சியமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story